தெளிவு . அறிவு . சுதந்திரம்
நம் உண்மையான இல்லத்தை கண்டுகொள்ளுதல்
மன அமைதி மற்றும் தெளிவான பார்வையை அடைய உதவும் எளிய பாதை
உங்கள் பயணத்தை நோக்கிஇயல்பிலே நமக்கு உள்ள ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ளுதல். அது தேர்ந்த, வளமுடைய பல புதிய பரிமாணங்களையும், சாத்தியங்களையும், பாதைகளையும் திறக்கின்றது.
அப்போது நம் பிரச்சினைகளை மனதிடத்துடன் அணுகவும், புதிய கோணத்தில் பார்க்கவும், தேர்ந்த முறையில் கையாளவும் முடிகின்றது. மேலும், வாழ்வின் ஆழமான, நாம் அறியாத புதிய வளங்களையும், இன்பங்களையும் கண்டுகொள்ள வழிவகுக்கின்றது.
தற்போது நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை, கஷ்டங்களை, சவால்களை படிக்கற்களாக பயன்படுத்தி, நமக்குள் இருக்கும் உண்மையான ஆற்றலையும், அறிவையும் முழுமையாக கண்டுகொள்ளுதல்.
அதன் மூலம், நம் பயங்களை படிப்படியாக மனதிடத்துடன் எதிர் கொள்ளுதல்; மனஅழுத்தம், மனஉளைச்சல், மனச்சோர்வு, உறக்கமின்மை, அடிமை பழக்கம் போன்றவற்றை தெளிந்த, தேர்ந்த முறையில் அணுகுதல்.
இயற்கையான குணப்படுத்துதலுக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் ஒரு நல் சூழலை தந்து முழுமையான நல்வாழ்விற்கு வித்திடுவது இதன் பணி. ஞானம்பெற்ற பல உலக ஆசிரியர்கள் காட்டிய ஒளியை, நவீன முறையில் அதன் சாரம் குறையாமல் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். உலக துன்பங்களைக் குறைப்பதற்கான, தெளிவான அறிவை கொண்ட சமூகம் காணுவது இதன் ஆவல்.
தெளிவு சுதந்திரத்தைத் தருகிறது. சுதந்திரம் ஆழமான அன்பிற்கு வழிவகுக்கிறது.
தெளிவு, குணமடைதல் மற்றும் உள்ளார்ந்த சுதந்திரம் நோக்கிய முதல் படி...